Homeசெய்திகள்இந்தியாஉத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

-

 

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!
pHOTO: ANI

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…

கடந்த நவம்பர் 12- ஆம் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் உள்ள சுரங்கப்பாதை பணிகளில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சுரங்கப்பாதை முழுவதும் மூடியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 16 நாட்களாக இரவு, பகல் பாராமல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், மெட்ராஸ் இன்ஜினியர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

முதலாவதாக நெருங்கிய நண்பரின் படத்தை தயாரிக்கும் லோகேஷ்

தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும், சிகிச்சை அளிக்க ஏதுவாக, மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் மீட்கப்படும் தொழிலாளர்கள் சின்யாலிசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளது.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களை வரவேற்க அவர்களின் உறவினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ