Homeசெய்திகள்இந்தியாவாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

-

 

வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!
Photo: ANI

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 5- ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 08.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா- சீனா பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண முடிவு!

அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர், அர்ஜுன் ராம் மேக்வால், அமித்ஷா, பியூஸ் கோயல் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணை தலைவர், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு தலைவர் தம்பிதுரை மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர்.

MUST READ