- Advertisement -
திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருட்களுக்கான தேவைப்பாடு குறைவு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 87.33 ஆக சரிந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் டாலரின் மாற்று மதிப்பு 68 ஆக இருந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது,”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.