Homeசெய்திகள்இந்தியாவினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கில் நாளை இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு

வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கில் நாளை இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு

-

- Advertisement -

தகுதி நீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக எடையை அளவிட்டபோது அவர் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதானல் அதிர்ச்சிக்குள்ளான வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதா அறிவித்தார்.

இந்த நிலையில், தனது தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிராக வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மேல்முறையீடு தொடர்பாக நேற்று மாலை சர்வதே ச விளையாட்டு நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது வினேஷ் போகத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து, வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவு தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை இரவு 9.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ