Homeசெய்திகள்இந்தியா'விக்ரம் லேண்டர்' உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!

‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!

-

- Advertisement -

 

'விக்ரம் லேண்டர்' உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ தகவல்!
Photo: ISRO

சந்திரயான்- 3ன் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்குச் சென்றதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!

இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் நிலைக்கொண்டிருக்கும் இடத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் ஸ்லீப் மோடுக்கு சென்றது.

அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு

லேண்டர் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்துவிட்டது. வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று மீண்டும் பகல் பொழுது தொடங்கியவுடன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

MUST READ