விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு
சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், சுமார் ஒரு மாதத்தைக் கடந்தும் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, லேண்டரை வெற்றிகரமாகப் பிரித்து, உயரத்தையும், வேகத்தையும் வெற்றிகரமாகக் குறைத்துள்ள நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3-ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது, விக்ரம் லேண்டர் வழக்கமான பரிசோதனைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5.20 மணி முதல் நேரலை செய்யப்பட உள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கருவிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டுவருகிறது.