Homeசெய்திகள்இந்தியாவடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை

வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை

-

- Advertisement -
வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை
வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ராமநவமி

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கி கொண்டதால் அப்பகுதியை போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் உள்ள சிப்பூர் பகுதியில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது. இருதரப்பும் கல்வீசி தாக்கி கொண்டதில் ஏராளமானூர் காயமடைந்தனர்.

ராமநவமி

குஜராத் மாநிலம் வதோதராவில் ராமநவமியை ஒட்டி நடைபெற்ற பேரணி மசூதி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் இருதரப்பு மோதல் வெடிக்கவே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை போல் உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா, லக்னோ நகரங்களிலும் ராமநவமி பேரணியில் கலவரம் மூண்டது.

MUST READ