ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது.
பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின் விலை ரூ.299 லிருந்து 349, 365 நாள்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் விலை ரூ.2,899 லிருந்து ரூ.3,499ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வோடஃபோன் ஐடியா (Vi) ஜூன் 28 அன்று தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. அந்த புதிய திட்டம் ஜூலை 04 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தனர்.
சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லுக்குப் பிறகு கட்டணங்களை அதிகரிக்கும் மூன்றாவது தொலை தொடர்பு ஆபரேட்டராக மாறியுள்ளது.
அதன் படி வோடஃபோன், ஐடியா (Vi) அதன் கட்டணங்களை 11-24% உயர்த்தியுள்ளது.
அதன்படி, ரூ.179 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.199 ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.459 ஆக இருந்த கட்டணம் ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1GB ரூ.269 பிளான் ரூ.299 ஆகவும், 1.5GB ரூ.299 பிளான் ரூ.349 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 GB டேட்டா உடன் 28 நாளுக்கான வோடஃபோன் ஐடியா கட்டணம் ரூ.179இல் இருந்து ரூ.199 ஆகவும், 6GB டேட்டா உடன் 84 நாளுக்கான கட்டணம் ரூ.459இல் இருந்து ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.