விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….
வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், மனுதாரர், தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது கூறிய நீதிபதிகள், “தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக அனைத்து வித விசாரணைகளையும் நடத்தினோம். ஆணையத்தைக் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்ததுடன், 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…
EVM- ல் கட்சி சின்னத்துடன் பார் கோர்டு பொருத்துவது குறித்து ஆராய நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார்.