Homeசெய்திகள்இந்தியாபாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!

பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!
Video Crop Image

நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது நண்பர்களுடன் ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு அருகே உள்ள தலகோனா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, பாறையின் மேல் இருந்து நீரில் குதிப்பதாகவும், இதனை வீடியோ பதிவு செய்யும் படியும், நண்பர்களிடம் சுமன் கூறியுள்ளார்.

அதேபோல், பாறையில் இருந்து தண்ணீரில் குதித்தவர் மீண்டும் கரைக்கு வரவில்லை. நண்பர்கள் தேடியும், சுமனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், தகவலறிந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி, பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த சுமனின் உடலை மீட்டனர். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சுமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

தலகோனா நீர்வீழ்ச்சியில் மூழ்கி இந்த ஆண்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ