வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் தங்களது குடியிருப்புகளை இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வரும் நிலையில், நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் பணி இன்று 17வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் சார்பிலும், நடிகர்கள் கமல், விக்ரம், சூர்யா, தனுஷ், பிரபாஸ், சிரஞ்சீவி, மோகன் உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கினர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்கியுள்ளார். இந்த தொகை
கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டு உள்ளது.