Homeசெய்திகள்இந்தியாகாசாவைக் கைப்பற்றுவோம்’: ‘பாலஸ்தீனியர்களை விரட்டியடிப்போம்’: வரலாற்றையே மாற்றப்போகும் அதிபர் டிரம்பின் திட்டம்..!

காசாவைக் கைப்பற்றுவோம்’: ‘பாலஸ்தீனியர்களை விரட்டியடிப்போம்’: வரலாற்றையே மாற்றப்போகும் அதிபர் டிரம்பின் திட்டம்..!

-

- Advertisement -

பாலஸ்தீனத்தின் காசா நகரைக் கைப்பற்றுவோம், அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். அவருடனான சந்திப்புக்குப்பின் இந்த அதிரடியான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பேச்சும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

அமெரிக்க
அது மட்டுமல்லாமல் காசாவைக் கைப்பற்றியபின் அங்கிருக்கும் பாலஸ்தீனிய மக்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து மத்திக கிழக்கு நாடுகளுகான எகிப்து, ஜோர்டான் நாடுகளுக்கு அனுப்புவோம் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால், ஜோர்டான், எகிப்து நாடுகள் இந்த அறிவிப்பு வெளியானதும் இதை நிராகரித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது, இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

பதில் நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையிலான சண்டை கடந்த 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதுவரை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 46 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர், 1600 இஸ்ரேல் ராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் காசாவிலிருந்து வெளியேறி வெவ்வேறு நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.இதனிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அமைதிப் பேச்சு நடந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தது. இதன்படி, இருதரப்பும் கைதிகளை ஒப்படைத்து வருகிறார்கள்
இந்த சூழலில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு பயணித்தார். அங்கு 2வதுமுறையாக அதிபராக பதவி ஏற்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து, அதிபர் நெதன்யாகு பேசினார். இரு தலைவர்களுக்கும் நீண்டநேரம் ஆலோசித்த நிலையில் கூட்டாக இருவரும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், ”பாலஸ்தீனத்தின் காசா நகரை அமெரிக்கா கைப்பற்றும், அங்குதேவையான அனைத்துப் பணிகளையும் செய்து, அதை சொந்தமாக்கிக்கொள்ளும். காசாவில் இருக்கும் வெடிக்காத வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தி, சேதமடைந்த கட்டிடங்களை சரி செய்வோம். அங்கு பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தி, தேவையான வேலைவாய்ப்புகளை, மக்களுக்கு தேவையான வீடுகளை வழங்குவோம். இது இங்கு வரும் பாலஸ்தீனியர்களுக்கு அல்ல. பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிவைப்போம். உண்மையிலேயே அங்கே போராடி வாழ்ந்து, இறந்து, அங்கே ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்த அதே மக்களால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு ஆக்கிரமிக்கப்படும் ஒரு செயல்முறையை அது மேற்கொள்ளக்கூடாது. காசாவில் வாழும் 20 லட்சம் மக்கள் மனித நேய மனநிலை கொண்ட வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில் “ அமெரிக்க அதிபரின் திட்டம், காசாவின் வரலாற்றை மாற்றும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்” எனத் தெரிவித்தார்.அதேசமயம், ஐ.நா.வுக்கான பாலஸ்தீனத்தின் தூதர், பாலஸ்தீன மக்களின் விருப்பத்துக்கு இந்த உலகம் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிபர் ட்ரம்ப் அளித்த ஆலோசனைகளை எகிப்து, ஜோர்டான் நாடுகளும் நிராகரித்துள்ளன. இதற்கிடையே ஹமாஸ், இஸ்ரேல் இடையே 2வது கட்ட அமைதி ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் பேச்சு வார்த்தையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

MUST READ