Homeசெய்திகள்இந்தியாஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் - உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் – உச்சநீதிமன்றம் கேள்வி

-

மாநகராட்சியில் டில்லி கவர்னர் தலையிட்டால் ஜனநாயகம் என்ன ஆகும்,” என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் - உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி மாநகராட்சியில் 18 உறுப்பினர்களை கொண்ட உள்ளாட்சி நிலைக்குழுவில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு கடந்த வாரம் நடந்த தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த சுந்தர் சிங் தன்வார் வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: டில்லி மாநகராட்சியில் இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் விவகாரம் உள்ளது. இதனை நடத்துவதற்கு மேயர் ஷெல்லி ஓபராய் உள்ளார். அப்படி இருக்கையில் உங்களுக்கு எப்படி அதிகாரம் கிடைத்தது.

இவ்வாறு நீங்கள் தலையிட்டால் ஜனநாயகம் என்ன ஆகும். இதிலும் அரசியல் செய்ய வேண்டுமா? தேர்தலை நடத்தக்கூடாது என நாங்கள் கூறியுள்ளோம் என தெரிவித்ததுடன், இது குறித்து பதிலளிக்க டில்லி கவர்னருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

MUST READ