
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் தலைமையில் உயர்மட்டக் கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், புதிய தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!
பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை. இயற்கையைச் சுரண்ட விருப்பமில்லை; சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகைப் பாதுகாக்கப் பாடுபடுகிறோம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரண்டு நாடுகளும் தோளோடு தோள் சேர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறோம். இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட இரு நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகிறது.
விஜயின் அடுத்த மூவ்….. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாலை நேர பள்ளிகளை திறக்க முடிவு!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கும் முதன்மையானது ஜனநாயகம்; ஜனநாயக அடிப்படையில் தான் அரசியலமைப்பு சட்டம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.