Homeசெய்திகள்இந்தியாயார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!

யார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!

-

 

யார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யார் இந்த அருண் கோயல் என்பதை விரிவாகப் பார்ப்போம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!

கடந்த 1985- ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், 1989- ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினார். மத்திய கலாச்சாரத்துறை, தொழிலாளர் துறை, நிதித்துறை, டெல்லி மேம்பாட்டுக் கழகம் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு அரசுத் துறைகளிலும் பணியாற்றி உள்ளார். 2019- ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல், 2019- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கனரக தொழிற்துறைச் செயலாளராகப் பணியாற்றினார்.

2022- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதியுடன் தனது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், அருண் கோயல் 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18- ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த நாளே, தேர்தல் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல் மற்றும் அனுப் பாண்டே ஆகியோர் பணியாற்றினர். அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிக் கடும் கண்டனங்களைப் பதிவுச் செய்திருந்தனர். இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது, அருண் கோயல் நியமனம் குறித்து நீதிபதிகள் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.

குறிப்பாக, அவசர அவசரமாக நியமித்தது ஏன் என அருண் கோயல் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எனினும், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. 2027- ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில் அருண் கோயல் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

MUST READ