Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? - ப....

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? – ப. சிதம்பரம் கேள்வி

-

- Advertisement -

நாடாளுமன்ற வளாகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே விழுந்ததாக புகார்கள் அளித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவின் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர் கட்சி எம்பிக்கள் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்று பேசினார்கள். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவை கடுமையாக எதிர்த்தார்கள்.

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என்று எதற்கு எடுத்தாலும் அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக பகவான் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று அம்பெத்கரை அலட்சியப்படுத்தி பேசினார். இதனால் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி எம்பிக்கள் கொந்தளித்தார்கள்.

19ம் தேதி முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு எதிராக ஆளும் பாஜக எம்பிக்களும் போராட்டத்தில் இறங்கினிர்கள்.

நாடாளுமன்றம் வரலாறு காணாத அளவுக்கு களேபரம் ஆனது. இதனிடையே ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் தன்னை ராகுல்காந்தி தள்ளிவிட்டார் என்றும் அதனால் தலையில் பலத்த அடிப்பட்டு விட்டது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல்காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஒளி, ஒலி காட்சியை வெளியிட்டால் உண்மை நிலவரம் நாட்டு மக்களுக்கு தெரிந்துவிடும் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?

நுழைவாசலிலும் நாடாளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் காமிராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?

அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?

உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே? ஏன் வெளியிட மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

MUST READ