
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியீடு…..எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் படக்குழு!
நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்ற நிலையில், மக்களவையில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
தெலுங்கில் ரிலீஸ் ஆகும் கவினின் டாடா!
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் மசோதாவுக்கு மக்களவை உறுப்பினர் ஓவைசி மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். வாக்குச்சீட்டு முறையில் உறுப்பினர்கள் மசோதாவுக்கு வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது