27 ஆண்டுகள் இழுபறியை முடிவுக் கொண்டு வந்து நாடாளுமன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கும் நிலையில், கட்சி வித்தியாசம் பாராமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சரித்திரம் படைத்துள்ள மசோதாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
பொதுவாக நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க., அல்லது பா.ஜ.க. ஆகிய எதிர்ப்பு கட்சிகள் மற்றும் ஆதரவுக் கட்சிகள் என ஏதேனும் ஒருவகையில் வித்தியாசங்கள் வெடிக்கும். ஆனால் மகளிர் மசோதாவைப் பொறுத்த வரையில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கோர்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் அந்த கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை, தனது கட்சி ஜெயலலிதா, ஜானகி என இரண்டு மகளிரை முதல்வர்களாக தமிழ்நாட்டுக்கு அளித்தது என பெருமிதம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, “மகளிர் ஒதுக்கீட்டில், ஓபிசி உள் இடஒதுக்கீடு தேவை என வலியுறுத்தினார். அதேபோல், 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே தொகுதி வரையறைக்காக, காத்திருக்காமல் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், இந்த மசோதா வரவேற்கத்தக்கது என மத்திய அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஓபிசி உள்ஒதுக்கீடு அவசியம் எனக் குறிப்பிட்டு, பிற துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.