Homeசெய்திகள்இந்தியாஉலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர...

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!

-

 

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!
Photo: ICC

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் நேரில் கண்டுகளிக்கவுள்ளனர்.

“ராஜஸ்தான் மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை மட்டுமே காங்கிரஸ் செய்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள், முன்னாள் கேப்டன்கள், பல்வேறு கிரிக்கெட் அணிகளின் கேபடன்கள், திரைப் பிரபலங்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் என இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளிக்கவுள்ளனர்.

இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய விமானப் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும், போட்டியின் இடைவெளியின் போது, பிரபல இசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவை பகலாக்கும் வாணவேடிக்கைகளும் நடைபெறவுள்ளது.

“புதிய வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கார்டு தருவது நிறுத்தம்”- பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு!

இரு நாட்டு வீரர்களும் உலகக்கோப்பையைக் கைப்பற்றி விட வேண்டும் என முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றனர்.

MUST READ