Homeசெய்திகள்இந்தியா"உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது"- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி...

“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

-

 

"உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது"- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பான அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருந்த மாற்றங்கள் 10 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் நாடெங்கும் மிக விரைவாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!

மீதமுள்ள ஏழை மக்களையும், ஏழ்மையில் இருந்து மீட்டெக்க முடியும். முத்தலாக் அமல், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு உள்ளிட்டவைச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை!

பாதுகாப்புத் துறை உற்பத்தி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. “இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாகப் பேசப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இத்தகைய நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை; உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது; ரூபாய் 1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பணப்பரிவத்தனை நடைபெறுகிறது; யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூபாய் 1,200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ