மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை!
பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விலகியதாக செய்தி பரவியது.
இதனை மறுத்துள்ள சாக்ஷி மாலிக், நீதிக்கான போராட்டத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்றாலும், ரயில்வேத்துறையில் தனது பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் திரும்பப் பெறுவதாக வெளியான தகவல்கள் வதந்தி என்றும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் ஹாரர் த்ரில்லர்!
முன்னதாக, டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் இல்லத்தில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.