Homeசெய்திகள்இந்தியாதவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!

தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!

-

 

தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் சிக்கலில் தள்ளியதாக மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!

2004- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாக மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மன்மோகன் சிங் அரசு தொலைநோக்கு பார்வையுடன் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடுகளைச் செய்ய தவறிவிட்டது. கொள்கை முடிவுகளை எடுப்பதில் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் காமன்வெல்த் ஊழல் ஆகியவற்றையும் மத்திய அரசு தனது வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!

அதிக வாராக்கடன் காரணமாக, வங்கிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நிலையை வலுவான முடிவுகள் மூலமாக சீர் செய்ததாகவும், வெள்ளை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய இறுதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரம் தற்போது வலுவான வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும், இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறப்பான முடிவுகளே காரணம் எனவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ