எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தனக்கு கணக்கு இல்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்..
எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலிக்கணக்கு மற்றும் டீப் ஃபேக் புகைப்படங்கள் தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா டெண்டுல்கர் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில், சமூக வலைத்தளங்கள் நமது சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொள்வதற்கான அற்புதமான தளமாக இருந்தாலும், சிலர் அதனை உண்மைக்கு புறம்பாகப் பயன்படுத்துவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
டீப் ஃபேக் புகைப்படங்களை வைத்து, எக்ஸ் தளத்தில் தனது பெயரைப் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் தனக்கு எந்த கணக்கும் இல்லை என்றும், போலி கணக்குகள் தொடங்குபவர்கள் மீது எக்ஸ் தளம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் சாரா டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டகங்களை இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியானது!
சாரா டெண்டுல்கர் பெயரில் ப்ளூ டிக்குடன் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு வந்ததையடுத்து, சாரா டெண்டுல்கர் தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.