Homeசெய்திகள்இந்தியாஎடியூரப்பாவின் மகனை எதிர்த்து களம் காணப்போவதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு!

எடியூரப்பாவின் மகனை எதிர்த்து களம் காணப்போவதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு!

-

 

எடியூரப்பாவின் மகனை எதிர்த்து களம் காணப்போவதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு!

கர்நாடகாவின் ஷிமோகா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்தரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.

கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. அதில், எடியூரப்பாவின் மகன் ராகவேந்தர் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொகுதியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பா, தனது மகன் கண்டீஸ்வரருக்கு இந்த தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பளிக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்காததால் ஈஸ்வரப்பா கடும் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது.

“2025 ஜூனில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்த சூழலில், ஷிமோகா தொகுதியில் ராகவேந்திரை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கப் போவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.

MUST READ