அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்திய அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை செயற்கை நுண்ணறிவு தொடர்பான வெள்ளை மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்தார்.
“ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றுவார்” என்று டிரம்ப் அறிவித்தார்.
‘‘டேவிட் சாக்ஸுடன் நெருக்கமாகப் பணிபுரியும் ஏஐ-ல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதிசெய்து, நமது நாட்டிற்குச் சேவை செய்ய முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பிற்கு டொனால்ட் டிரம்பிற்கு நன்றி’’ என அரிராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். pic.twitter.com/kw1n0IKK2a
முன்பு மைக்ரோசாப்ட், ட்விட்டர், யாகூ, பேஸ்புக், ஸ்னாப் ஆகியவற்றில் தயாரிப்புக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய ஸ்ரீராம் கிருஷ்ணன், வெள்ளை மாளிகையின் ஏஐ ம்அற்றும் கிரிப்டோ தலைமை ஆலோசகராக பணியாற்றுவார்.
“டேவிட் சாக்ஸுடன் பணிபுரியும் ஸ்ரீராம், ஏஐ-ல் அமெரிக்கத் தலைமையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துவார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை அரசுக்கு முழுவதும் வடிவமைத்து ஒருங்கிணைக்க உதவுவார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோஸ் அஸூரின் நிறுவன உறுப்பினராக ஸ்ரீராம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,” என்று டிரம்ப் கூறினார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன், “எங்கள் நாட்டிற்குச் சேவை செய்ய முடிந்ததற்கும், டேவிட் சாக்ஸுடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஏஐ-ல் அமெரிக்கத் தலைமையைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணனின் இந்த நியமனத்தை அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தினர் வரவேற்றுள்ளனர்.
“ஸ்ரீராம் கிருஷ்ணனை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பால் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று இந்தியாஸ்போராவின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜோஷிபுரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு துறையில் ஸ்ரீராம் ஒரு நுண்ணறிவு சிந்தனையாளர். பொதுக் கொள்கை, சர்வதேச விவகாரங்கள், முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கலந்த அவரது முந்தைய பணி, இந்த முக்கியப் பாத்திரத்தில் அவர் தேசத்திற்குச் சேவை செய்வதால் அவருக்கு நல்ல நிலைப்பாட்டை ஏற்படுத்தும்,” என்றும் சஞ்சீவ் ஜோஷிபுரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.