ED ரெய்டு உள்நோக்கம் அற்ற உன்னதமானது என்றால்… ரெய்டு முடிவுகள் வெளிவரும் முன்னபே செய்தி வெளியிட்டது எப்படி? நடிகர் விஜய் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே?
கீழே உள்ள செய்தியை படியுங்கள்:
”சுற்றி வளைக்கப்பட்டு கையும் களவுமாக சிக்குகிறார் விஜய், நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படுகிறது. மாண்பு பொருந்திய நீதியின் இலக்கணம் அம்மா அனிதா சுமந்த் தண்டனைக்கான இடைக்கால தடையை விஜய்க்கு சாதகமாக வழங்குகிறார். (நீதிபதி அனிதா சுமந்த் – நமது வலதுசாரி சிந்தனையாளர் சுமந்த் சி ராமன் அவரகளது மனைவி)
இப்ப முதல் வரிக்கு வருகிறேன், EDக்கு உள்நோக்கம் என சொல்ல வலுவான காரணங்கள் பல இருக்கிறது. இந்த TASMAC விவகாரத்தில் பிஜேபியோடு தற்போது கூட்டணியில் உள்ள IJK பச்சமுத்து அவர்களின் Federal நிறுவனம் “ ED ‘unravels’ Rs 1,000-crore liquor scam in TN, confirms The Federal story” என ரெய்டு முடிவுகள் வெளிவரும் முன்னதாகவே செய்தி வெளியிட்டது. அதன் பிறகு பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை 1000 கோடி ஊழல் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவிக்கிறார். சில மணிநேரம் கழித்து அதிகாரப்பூர்வமாக 1000 கோடி என ED பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது.
ED ரெய்டு நடத்துவதன் நோக்கத்தை பிஜேபி ஆதரவாளர்களே “ஆமா அப்டிதான் செய்வோம் செய்கிறோம்” என ஒத்துக்கொண்ட போதும். கொள்கை எதிரிக்கும் EDக்கும் வலு சேர்க்கும் விதமான அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை விஜய்க்கு ஏன் வந்தது? பதில் very simple: ஏற்கனவே வலுவா சிக்கி சிறை செல்ல பயந்த விஜயை தங்களுக்கான washing Machineல் போட்டுவிட்டது பாசிச பிஜேபி.
ஆடியோ வீடியோ documents என வசமாக சிக்கிய விஜய், திமுகவை ஊழல் கட்சியாக காட்ட தமிழ்நாட்டிற்குள் “ஒரு A political கெஜ்ரிவால் அசென்மெண்ட்” டை செய்து தருவதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஒரு லாஜிக் சொல்றேன் யோசித்து பாருங்கள், சினிமா துறையில் கமலை போல விஜய் முழு சம்பளத்தையும் வங்கி கணக்கில் White ல் வாங்குவார் என யாராவது சொல்லி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லை தானே
விஜய்க்கு சொந்தமான நிறுவனங்கள் விஜய் அல்லாமல் யார் யார் பெயரில் இருக்கு, எப்படி சம்பளம் வாங்குவார், Share எப்படி வாங்குவார், Rights எப்படி வாங்குவார், அவருடைய உதவியாளர் எப்படி படம் எடுக்கிறார், அதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது? தனி செல்போன் வைத்து தனது முதலீடுகள் குறித்து பேசுவாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கும் எனக்கும் பதில் தெரியாமல் இருக்கலாம்.
அதிகார வர்கத்திற்கு அதெல்லாம் விரல் நுனியில் இருக்கும். சமூக அக்கறையுடன் பிஜேபியின் பண மதிப்பு இழப்பு, GST, NEET, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என பேசி அடையாளப்பட்ட, பிறப்பால் சிறுபான்மை என தொரிந்தும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு நபரை, தங்களது கொள்கை எதிரி என சொல்லி எப்படி களம் ஆட விடும் பிஜேபி? “காங்கிரஸ் முக்த் பாரத்” அசென்மெண்ட்க்கு வடிவம் கொடுத்த தங்களால் வளர்க்கப்பட்ட கெஜ்ரிவாலையே காலி செய்து சிறையில் அடைக்கிற பிஜேபி, விஜய்க்கு மட்டும் தண்டனைக்கான இடைக்கால தடையை நீடித்து நடமாட விடுகிறது? ஏன்? எதற்கு?
“வலு குறைந்த எதிரியை விழ்த்துவதை விட, மிரட்டி தன் பக்கம் வரவழைத்து தன்னுடைய வலுவான எதிரியை எதிர்க்க/வீழ்த்த தனக்கான அடியாளாக களத்தில் இறக்கலாம்” என பிஜேபி முடிவெடுத்திருக்கிறது. விஜய் அதன்படியே பாதுகாப்பாக ஆடுவார்”.
2026 தேர்தல்; புதிய வியூகத்தில் பாஜக ! இலக்கு நிர்ணயித்து களமாடும் திமுக; வேடிக்கை பார்க்கும் அதிமுக