பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிகுலேஷன் பள்ளி, அருணை கிராணைட் என அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு வீடுகள். அலுவலகங்கள், உட்பட 40 இடங்களில் சுமார் 160 அதிகாரிகள் காலை 6.00 மணி முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
துணை ராணுவு படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.