Homeசெய்திகள்ஜல்லிக்கட்டு வரலாறு - புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு வரலாறு – புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

-

ஜல்லிக்கட்டை பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி எழுதியுள்ளார். பிற மொழி பேசுபவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் வெளியிடும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களின் வரலாற்றினை போற்றும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்திற்கு Thunderous Run Bountiful Harvest – Bull Scapes of Tamil Geography என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட ஜல்லிக்கட்டு வீரர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. ஆர்.எஸ். பாரதி, மூத்த வழக்கறிஞர் திரு. விடுதலை, திரு. பழ. செல்வகுமார்,, ரோஜா முத்தையா நூலக இயக்குநர் திரு. சுந்தர் கணேசன், கட்டடக்கலை வல்லுநர் திரு. கார்த்திக் பிரேம் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ