தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;
ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களுக்கான காலி பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு… மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!
மீதம் உள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.