Homeசெய்திகள்வேலை வாய்ப்புகூட்டுறவு சங்களில் 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

கூட்டுறவு சங்களில் 2000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

-

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள்  மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்களில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 2000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

tamilnadu assembly

விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு வரும் 7.11.2024 மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் 33 விற்பனையாளர், 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருநகர் மாவட்டத்தில் 58 விற்பனையாளர், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்பட உள்ளன.

MUST READ