Homeசெய்திகள்வேலை வாய்ப்புஎஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

-

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மத்திய அரசு பணிகளில் உள்ள 11,409 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வு அறிவிப்பை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ் எஸ் சி) ஏப்ரல் மாதம் நடத்த பட உள்ளதாக கடந்த மாதம் வெளியிட்டது. தேர்வாணையத்தின் அறிவிப்பின் படி இத்தேர்வினை கணினி வழியில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளனர். 40 வினாக்கள் முதல் கட்ட தேர்விலும் மற்றும் 50 வினாக்களை இரண்டாம் கட்ட தேர்விலும் என மொத்தம் 90 வினாக்களுக்கும் ஒவ்வொரு வினாவுக்கும் அதிகபட்சம் மூன்று மதிப்பெண் வழங்கப்பட திட்டமடபட்டுள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி 17 -ம் தேதிக்குள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் அன்று இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். ஆகையால் பிப்ரவரி 24ஆம் தேதி வரை மிண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

https://ssc.nic.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரமாக, இனிவரும் எஸ் எஸ் சி போட்டித் தேர்வுகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ