இந்தியா முழுவதும் குடியரசு தினத்திற்காக அரசு விடுமுறை அளித்தாலும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. கட்டாயத்தின் பேரில் ஊழியர்களை வேலை செய்ய சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை நொளம்பூர், மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை தினத்தில் செயல்பட்டு வருவதால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும் சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரக்கூடிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியும் மூடி இருப்பதால் அதையும் திறக்க வேண்டும் என கட்டாயம் படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடியரசு தின விடுமுறையிலும் வங்கி அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைக்கிறது திமுக அரசு. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் வங்கிகள் செயல்பட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியரசு தினம் விடுமுறையை அவமதிக்கும் வகையில் வங்கிகள் செயல்பட்டு வருவதால் மகளிர் சுய உதவி குழுவினர் வங்கியில் கூடியுள்ளனர்.