Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்!

பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்!

-

- Advertisement -

பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிவோம்.பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்!பீட்சா சாப்பிடுவதால் சில நன்மைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது பீட்சாவின் பேஸில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதன் காரணமாக உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்க இது உதவுகிறது. அதேபோல் தக்காளி சாஸில் லைக்கோபின் என்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பீட்சாவின் மேல் தூவக்கப்படும் காய்கறிகள் உடலுக்கு நார்ச்சத்துகளை தருகிறது. அடுத்தது அதில் வைக்கப்படும் சீஸ் புரதச்சத்துக் கொண்டது. இருப்பினும் பீட்சாவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது இல்லை. மேலும் பீட்சாவின் பேஸ் குறைந்த கொழுப்பு கலவைகள் இல்லாமல் அதிக கொழுப்பு கலவைகள் கொண்டவையாக இருப்பதாலும் பீட்சாவானது சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுவதாலும் வயிற்று புற்றுநோய், செரிமான கோளாறு போன்ற பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். பீட்சா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்!அது மட்டும் இல்லாமல் பீட்சாவின் டாப்பிங்ஸாக இறைச்சிகளை பயன்படுத்தினால் இதய நோய் ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே பீட்சாவை ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது நல்லது. மைதாவிற்கு பதில் கோதுமையில் பீட்சா பேஸ் தயார் செய்து சாப்பிடுவதால் பாதுகாப்பாகவும் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

MUST READ