மருத மரம் என்பது எப்பொழுதுமே பசுமையாக காட்சியளிக்க கூடியது. மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறலாம். ஏனெனில் அவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது இந்த மருத மரம். அந்த காலங்களில் நம் முன்னோர்களால் சாலை ஓரங்களில் நடப்பட்ட மரம் தான் இந்த மருத மரம்.
மருத மரங்களில் இருந்து கிடைக்கும் மருதம்பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையதாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி அதிக அளவு இருக்கிறது.
மருதம்பட்டையை தண்ணீரில் ஊற வைத்து குடிநீராக பருகும் போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
நீரழிவு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, தூக்கமின்மை, ரத்த கொதிப்பு, இதய படபடப்பு போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மருதம் பட்டையில் நிறைந்து காணப்படுவதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
100 கிராம் அளவு மருதம்பட்டை, 20 கிராம் அளவு சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, குடிநீராக குடித்து வந்தால் இதயம் வலுப்பெறும்.
இந்த கசாயத்தை உதிரப்போக்கு அதிகம் உள்ள பெண்கள், மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.