உலர் திராட்சையின் பயன்கள்:
உயர்தரமான திராட்சை பழங்களை பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திராட்சை பழங்களில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட உலர்த்தி பதப்படுத்திய திராட்சை பழங்களில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. அந்த வகையில் இது பச்சை திராட்சை பழத்தை விட பத்து மடங்கு அதிக உஷ்ணத்தை கொடுக்கக் கூடியது. மேலும் உலர் திராட்சையில் சுக்ரோஸ், பிரக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளது. அதேசமயம் பொட்டாசியம், மெக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் அதிக அளவில் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க இது பயன்படுகிறது.
உலர் திராட்சையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள தாமிர சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
உலர் திராட்சை பழங்களை எடுத்து நன்றாக கழுவி அதனை பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து அப்படியே குடித்து வர மலச்சிக்கல் ஏற்படாது.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், இந்த உலர் திராட்சைகளை 8 முதல் 10 வரை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் அதன் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு கொடுக்க மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
மேலும் இதில் உள்ள அதிக அளவிலான கால்சியம் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்கள் தினசரி இரண்டு வேலைகள் இந்த உலர் திராட்சையை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடைவதை காணலாம்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.