Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?

உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?

-

நம் உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் பல்வேறு சரும பிரச்சனைகள் உண்டாகிறது. உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?பருக்கள், சுருக்கங்கள் போன்றவை இந்த நீர் சத்து குறைவினால் ஏற்படக்கூடியதுதான். இப்போதுள்ள வெயிலினால் முகம் கருமையானதாகவும், தோல் ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிடுகிறது. நாள் ஒன்றுக்கு நாம் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் நீர் வரை இந்த கோடை காலத்தில் அருந்துவது நம் உடலுக்கும் நம் சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும். அதிக அளவு நீர் சத்து நம் உடலில் இருப்பது சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் பீட்ரூட்டில் இருக்கும் அதிக அளவில் நீர்ச்சத்து நம் சருமத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் ஆற்றல் உடையது. எனவே நம் சருமம் பொலிவுர பீட்ரூட் சாறு தினமும் குடித்து வரவேண்டும்.உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?

மேலும் இந்த பீட்ரூட்டில் ஃபேஸ்புக் செய்து முகத்தில் தடவி கழுவி வர நல்ல பலன் கிடைக்கும். இவை முகப்பருக்களை சரி செய்வது மட்டுமில்லாமல் பருக்களால் ஏற்படும் புண்களையும் அதனால் ஏற்படும் தொற்றுகளையும் குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் பீட்ரூட் முகத்தின் துளைகளில் இருக்கும் எண்ணெய் பசியை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கிறது.

பீட்ரூட் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வர விரைவிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பீட்ரூட் சாறுடன் சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும். இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.உங்கள் அழகை பார்த்து மத்தவங்க பொறாமைப்படனுமா?

பீட்ரூட் சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர இளமையான தோற்றத்தை பெறலாம்.

இருப்பினும் இம்முறைகளை பின்பற்றுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். அதே சமயம் இந்த முறையினால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அதனை தவிர்ப்பது நல்லது.

MUST READ