Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?

ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?

-

- Advertisement -

ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?ஆமணக்கு விதை, இலை, வேர், எண்ணெய் ஆகியவை இயல்பிலேயே கசப்புத் தன்மையை உடையது. அதே சமயம் வெப்பத்தன்மையும் கொண்டவையாகும். ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ, சிறு மரங்களாகவோ வளரும் தன்மை உடையது. இலைகள் மிகப்பெரியதாகவும் அகன்றதாகவும் காணப்படும். பத்து அடி உயரம் வரை வளரக்கூடியவை.

ஆமணக்கு இலைகள் வாதம், வீக்கம், கட்டி ஆகியவைகளை குணப்படுத்தும்.

இதன் விதைகள் வயிற்று வலி, சிறுநீர் அடைப்பு போன்றவற்றை குணப்படுத்தும்.

ஆமணக்கு விதையின் மேல் தோலை நீக்கி, அதில் உள்ள பருப்பை அரைத்து பசையாக்கி கட்டி இருக்கும் இடங்களில் பூசி வர கட்டிகள் உடைந்து விரைவில் குணமடையும்.

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் விளக்கெண்ணையை சேர்த்து வதக்கி வீக்கம் இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

நாலு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யும் ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்து கலந்து சாப்பிட சுகபேதியாகும். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.ஆமணக்கில் இவ்வளவு பயன்களா?

தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதற்கும் ஆமணக்கு இலையை நெய் தடவி லேசாக வதக்கி, இளஞ்சூட்டில் மார்பில் வைத்து கட்டலாம்.

இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

MUST READ