Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நீங்க டயட்ல இருக்கீங்களா?..... அப்போ இதையும் சேர்த்துக்கோங்க!

நீங்க டயட்ல இருக்கீங்களா?….. அப்போ இதையும் சேர்த்துக்கோங்க!

-

உடல் எடையை குறைப்பதற்கு நாம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேசமயம் 45 நிமிடங்களுக்கு நடை பயிற்சி செய்வது நல்லது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை விரைவாக குறைக்கலாம். இதுபோன்ற டயட்டில் இருப்பவர்கள் இந்த ஹெல்த் ட்ரிங்கையும் அதோடு சேர்த்துக்கோங்க.நீங்க டயட்ல இருக்கீங்களா?..... அப்போ இதையும் சேர்த்துக்கோங்க!

முதலில் சுத்தமான பருத்தி விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி 10லிருந்து 12 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பருத்தி விதைகள் ஊறிய பின் அதனை அலசி தண்ணீர் இல்லாமல் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இருந்து பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பால் போல் இரண்டு அல்லது மூன்று முறை பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.நீங்க டயட்ல இருக்கீங்களா?..... அப்போ இதையும் சேர்த்துக்கோங்க!

இப்போது திணை மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தேவையான அளவு கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து அதை வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது அந்த கருப்பட்டி கரைசலில் பிழிந்து வைத்திருக்கும் பருத்தி பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பருத்திப்பாலும் கருப்பட்டியும் சேர்ந்து நன்றாக கொதித்து வந்தபின் திணை மாவினையும் அதில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும். எனவே கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவின் பச்சை வாசனை போன பின்பு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.நீங்க டயட்ல இருக்கீங்களா?..... அப்போ இதையும் சேர்த்துக்கோங்க!

இப்போது அருமையான திணை கருப்பட்டி பருத்திப்பால் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த பருத்தி பாலை எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்கும்.

MUST READ