வாழைப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதன்படி வாழைப்பழத்தில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எனவே வாழைப்பழத்தில் ஹேர் மாஸ்க் செய்தால் முடி வளர்ச்சி அதிகமாகும். அத்துடன் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் வலுவாகவும் மாறும். இப்போது வாழைப்பழம் ஹேர் மாஸ்க் எப்படி செய்வது? என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழம் ஹேர் மாஸ்க் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டினை எடுத்து அப்படியே தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு தலையில் எந்தவித தூசியும் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ போட்டு முடியை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி வலுவாகவும் மென்மையாகவும் மாறுவதை விரைவில் காணலாம். அதே சமயம் இந்த வாழைப்பழம் ஹேர் மாஸ்க் தலையில் வறட்சியை நீக்கி பொடுகு பிரச்சனைக்கும் நல்ல தீர்வு தரும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.