Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!

முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!

-

முருங்கை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!

பொதுவாகவே முருங்கைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இந்த முருங்கைக் கீரை எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகையாகும். எனவே முருங்கைக் கீரையின் இலைகளின் சாறு சாப்பிடுவதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

முருங்கை ஜூஸ் குடித்து வர நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனை உடையவர்கள் இந்த முருங்கைக் கீரை ஜூஸ் எடுத்துக் கொள்வதால் சரி செரிமான பிரச்சனைகள் நீங்கி வயிறு சுத்தமாகும். மேலும் இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கும் காரணத்தால் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் முருங்கை ஜூஸ் பருகுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் கொண்டு வரலாம். முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!அதாவது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் முருங்கை ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இது அலற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த முருங்கைக் கீரை ஜூஸ் குடிப்பதனால் உடல் வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்ததாக முருங்கை ஜூஸ் அனைத்து விதமான வயிற்று பிரச்சனைகளையும் குணமாக்கும் தன்மை உடையது. அல்சர் உடையவர்கள் கூட இந்த முருங்கை ஜூஸ் குடிக்கலாம். மேலும் அல்சர் ஏற்படாமல் தடுக்கவும் இந்த முருங்கை ஜூஸ் பயன்படுகிறது.முருங்கை ஜூஸ் குடிப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!

முருங்கை கீரை என்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. எனவே முருங்கைக் கீரை இலைகளை காய வைத்து பொடி செய்து அதனை சூடான நீரில் போட்டு கொதிக்க விட்டு தினமும் குடித்து வர உடலில் பலவிதமான மாற்றங்களும் நன்மைகளும் உண்டாகும். இல்லையென்றால் முருங்கை இலைகளை அப்படியே இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அத்துடன் இரண்டு அல்லது மூன்று பூண்டு மற்றும் வெங்காயம், சீரகம், மிளகு, இஞ்சி ஆகியவை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி சூடு ஆறிய பின் குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் இருமல், மார்பு சளி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

இருப்பினும் முருங்கை ஜூஸ் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ