Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

-

- Advertisement -

கால் ஆணி என்பது பாதத்தின் ஒரு பகுதியில் அழுத்தம் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் இது. இது உயிர் போகும் அளவுக்கு வலி தரக்கூடியது. பத்தில் இரண்டு பேராவது இந்த பிரச்சனையை கடந்து தான் வந்திருப்பார்கள். கால் ஆணி என்பது பயப்படும் அளவிலான பிரச்சினை இல்லை என்றாலும் இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லை என்றால் அதனை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

தற்போது இயற்கை வழிகளில் கால் ஆணிக்கு தீர்வுகளை காணலாம்.

அம்மான் பச்சரிசி செடி என்பது கால் ஆணிக்கு சிறந்த தீர்வு என்று சொல்கிறார்கள். அதாவது அந்தச் செடியை உடைத்து அதில் இருந்து வரும் பாலை கால் ஆணி இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வர வலி குறைந்து கால் ஆணி முற்றிலும் குணமடையும்.அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

அடுத்ததாக மருதாணி இலை, மஞ்சள் துண்டு ஆகிய இரண்டையும் மையாக அரைத்து பின் அதனை சிறிய உருண்டையாக உருட்டி இரவில் தூங்கும் முன் கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து துணி ஒன்றினால் கட்டி விட வேண்டும். இப்படி தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பின்னர் கொடிவேலி அல்லது சித்திரமூலத்தை புளியங்கொட்டை அளவு எடுத்துக் கொண்டு இதனை தூங்குவதற்கு முன்பாக கால் ஆணி இருக்கும் இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து வைத்து வர கால் ஆணி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஆனால் இதை பயன்படுத்தும் போது அந்த இடத்தில் புண்கள் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்த வேண்டும்.அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

அப்படி புண் ஏற்பட்டால் விளக்கெண்ணெய், மஞ்சள் ஆகிய இரண்டையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து புண் இருக்கும் இடத்தில் பூசி வர விரைவில் புண் ஆறிவிடும். கால் ஆணியும் குணமடையும்.

கால் ஆணியினால் உங்களுக்கு அதிக வலி இருப்பின் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ