Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?

-

இன்று பலருக்கும் சர்க்கரை நோய் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஏனென்றால் சர்க்கரை நோய் உடையவர்கள் விரும்பிய உணவுகளை சாப்பிட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?அது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய் உடையவர்களுக்கு ஏதேனும் புண்கள் அதனால் அரிப்புகள் ஏற்பட்டு அந்தப் புண் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகிறது. சிலருக்கு அந்த புண்கள் ஆறாமலேயே இருந்து அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

எனவே சர்க்கரை நோய் உடையவர்கள் இனிப்பு பொருட்களையும் அதிகமான எண்ணெய் பொருட்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம். அதேசமயம் மாம்பழம், பலாப்பழம் போன்ற பல வகைகளையும் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?அதாவது 100 கிராம் அளவு பழுத்த மாம்பழத்தில் 100 கலோரிகள் இருக்கிறதாம். ஆனால் பச்சை மாம்பழத்தில் 66 கலோரிகள் மட்டுமே உள்ளதாம். மேலும் இதில் மற்ற முக்கியமான சத்துக்களும் அடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் உடையவர்கள் பலாப்பழம் அல்லது மாம்பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் நாள் ஒன்றுக்கு நூறு கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மற்ற பழங்களையும் மாவட்ட சத்துப் பொருட்களையும் அதே நாளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா? ஆதலால் மாம்பழம், பலாப்பழம் மட்டுமல்லாமல் வேறு எந்த பழங்களாக இருந்தாலும் அதனை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய் உடையவர்கள் தினமும் உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

மேலும் சர்க்கரை நோய் உடையவர்கள் எந்த பழங்கள் அல்லது எந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற அதனை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

MUST READ