மீல் மேக்கர் என்பது சோயா பீன்ஸ் சக்கையை வைத்து தயாரிக்கப்படுகிறது. மேலும் பெரியது சிறியது என இரண்டு வகையான மீல் மேக்கர் இருக்கின்றன.
இதில் அதிக அளவிலானா புரதச்சத்து இருக்கிறது. பொதுவாக இந்த மீல் மேக்கர், வெஜிடபிள் பிரியாணி, கிரேவி போன்றவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசைவம் விரும்பாதவர்கள் இந்த மீல் மேக்கரை இறைச்சி போல் சமைத்து சாப்பிடுகிறார்கள். எனவே பெரும்பாலானோர் இந்த மீல் மேக்கரை விரும்புகிறார்கள். ஆனால் இந்த மீல் மேக்கரில் சில ஆபத்துகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மீல் மேக்கரை அதிக அளவு உண்பதால் ஹார்மோன்களின் சமநிலை மாறுபடுவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஆண்களுக்கு இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதாம். அது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு இது ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. அடுத்தது மீல் மேக்கர் அடிக்கடி சாப்பிடுவதனால் புற்றுநோய் செல்கள் அதிகம் உற்பத்தியாக கூடும். சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மீல் மேக்கர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பிறகு மீல் மேக்கர் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் அடிக்கடி எடுத்துக் கொள்ளக்கூடாது.
- Advertisement -