நம் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி நம் முக அழகை அதிகப்படுத்தலாம். வாருங்கள் எப்படி என்பதை பார்க்கலாம்.
சிறிய அளவு சர்க்கரையை எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அதனை சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அழுக்குகளும் வெளியேறி சருமம் பொலிவாக காணப்படும்.
தக்காளியை இரண்டாக நறுக்கி அதில் அதில் சிறிதளவு சர்க்கரையை தூவி முகத்தில் ஸ்கிரப் போன்று மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து அதில் தயிர் மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் ஸ்கிரப் போலவும் பயன்படுத்தி வரலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
2 சொட்டு ஆலிவ் ஆயில் அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் வித்தியாசத்தை காண்பீர்கள்.
குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதில் சிறிதளவு அரிசி மாவு மற்றும் சர்க்கரையை கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோள மாவு ஆகிய அனைத்தையும் சம அளவில் எடுத்து பேஸ்ட் போல கலந்து இதனை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கி முகம் பொலிவாக தெரியும். புருவத்தில் உள்ள முடிகளில் இந்த பேஸ்ட்டை தடவக்கூடாது.
இம்முறைகளை ஒரு முறை செய்து பார்த்து விட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.