Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மூட்டு வலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

மூட்டு வலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

-

- Advertisement -

மூட்டு வலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

மூட்டு வலி ஏற்படும் முக்கிய காரணமாக இருப்பது நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல். வயிறு முட்ட சாப்பிடுவது, தவறான உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் மன அழுத்தமும், தூக்கமின்மையும் இதன் மற்றொரு காரணமாகும். கால்சியம் சத்துக்கள் குறைபாட்டினாலும் இந்த மூட்டு வலி ஏற்படுகிறது.மூட்டு வலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

மூட்டு வலி ஏற்படாமல் தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமான எடையுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

மது அருந்துதல் கூடாது. புகைப்பிடித்தல் கூடாது.

எண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முதுகு தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதினால் மூட்டு வலி ஏற்படுவதை குறைக்கலாம்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடிப்பதனால் மூட்டு வலி குறையும்.

எலாஸ்டிக் பேண்டேஜ் அணிவதன் மூலம் முட்டியின் மீது அழுத்தம் உண்டாகி மூட்டு வலி குறைய வாய்ப்புள்ளது.மூட்டு வலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால் மூட்டு வலி குறைய தொடங்கும்.

வாயு தொல்லை உண்டாக்கும் உணவுப் பொருட்களையும் இனிப்பு வகைகளையும் எடுத்துக் கொள்வதை குறைத்தால் மூட்டு வலி குறைய தொடங்கும்.

மேலும் கால் முட்டி இணை உயரமாக தூக்குவதனால் மூட்டு வலியால் ஏற்பட்ட வீக்கங்களை குறைக்கலாம்.

இருப்பினும் இம்முறைகளை பயன்படுத்தி பார்ப்பதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

MUST READ