பல் சொத்தை ஏற்பட காரணங்கள்:
பல் பாதிப்புகளில் மிகவும் முக்கியமானது பல் சொத்தை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இந்த பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்வதுதான். இனிப்பு பண்டங்களில் உள்ள சர்க்கரைப் பொருட்கள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும் போது வாயில் பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. இது பல் எனாமலை அரித்து பற்களை சிதைக்கிறது இதன் விளைவால் தான் பற்கள் சொத்தையாகின்றன.
சில உணவுப் பொருள்கள் பற்களின் இடையில் சிக்கிக் கொண்டு சரியாக பல் துலக்காததால் அவை நீண்ட நாட்களாக பற்களில் இருப்பதாலும் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களை அரிக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாகவும் பல் சொத்தை ஏற்படுகிறது .
குழந்தைகள் விரைவில் புட்டி பாலை குடித்தபடியே உறங்கி விடுகிறார்கள். இதனால் பாலானது பற்களின் மேல் தங்கி சொத்தையை ஏற்படுத்துகிறது.
பல் சொத்தை வராமல் தடுக்க:
பற்களை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை துவக்குவது நல்லது. அதன்படி இரவு தூங்குவதற்கு முன்பாகவும் பல் துலக்குவது அவசியம். இதனால் பற்களில் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்க முடியும்.
பல் தேய்த்த பின்னர் வாயினை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
பல் சொத்தை ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லையென்றால் சொத்தை பாதிப்பு ஆழமாகி பல்வேறையும் பாதிக்கும். இதனால் பல் வலி ஏற்பட்டு பல்லை அகற்ற நேரிடும்.
எனவே இனிப்பு வகைகளை தவிர்த்து நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்குவது பல் துலக்குவது மிகவும் அவசியம். மூன்று முறை பல் துலக்கினால் மிகவும் சிறந்தது.
இருப்பினும் பல் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.