Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்... 

ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்… 

-

- Advertisement -

சிக்கன் சிப்ஸ் செய்வது எப்படி?

ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்... 

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி   –   ½ கிலோ

கடலை மாவு   – ½ கப்

அரிசி மாவு   –   ஒரு ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது    –   2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்   –  தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்... 

செய்முறை:

முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு கோழிக்கறியுடன் சிறிது உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க  வேண்டும். வெந்ததும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து எலும்புகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

நறுக்கி வைத்த கோழிக்கறி மீது கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப் பிலை சேர்த்து பிசைந்து, சூடான எண்ணையில் பொரித்தெடுக்க வேண்டும்.

ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்... 

மாலை நேரத்துக்கு ஏற்ற ‘சிக்கன் சிப்ஸ்’ தயார். வேகவைத்த கோழிக்கறி தண்ணீரை வீணாக்காமல் ‘சூப்’ செய்தும் அருந்தலாம்.

MUST READ