Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தேனில் கலந்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

தேனில் கலந்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

-

தேனில் அதிக அளவிலான நன்மைகள் இருக்கிறது. அதன்படி தேனை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் பல தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அத்துடன் பேரிச்சம் பழத்தில் தேன் கலந்து சாப்பிட இரும்புச்சத்து கிடைக்கும். தேனில் கலந்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!அதேபோல் வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, தாதுக்கள் போன்றவை அடங்கியுள்ளன. இந்த நிலையில் தேன் மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து எப்படி சாப்பிட வேண்டும்? அதை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பதை பார்க்கலாம்.

முதலில் ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை லேசாக கீறி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் சிறிதளவு தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கைப்படாமல் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை தினமும் சாப்பிட வேண்டும்.தேனில் கலந்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

அதாவது தேனில் சின்ன வெங்காயத்தை ஊற வைத்து சாப்பிடுவதனால் ஆஸ்துமா, மூச்சு பிரச்சினைகள், சளித்தொல்லை, நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இரவு நேரங்களில் இதை சாப்பிட காலையில் மலம் கழிக்கும் போது நம் உடலில் உள்ள சளி வெளியேறும். இதன்படி நெஞ்சு சளி குணமாகவும் இது பயன்படுகிறது.

தினமும் காலையில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். எடுப்பை சுற்றி இருக்கும் சதைகளும் குறைய தொடங்கும். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும் இது உதவுகிறது.

MUST READ