Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மழைக்காலங்களில் சளி, இருமல் பிரச்சனையா?..... தீர்வு இதோ!

மழைக்காலங்களில் சளி, இருமல் பிரச்சனையா?….. தீர்வு இதோ!

-

நம் உடலில் போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் வெளியில் இருக்கும் நுண் கிருமிகள் எளிதில் நம் உடலுக்குள் சென்று பல நோய்களை ஏற்படுத்துகிறது. அதில் குறிப்பாக மழைக் காலங்களில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். மேலும் குழந்தைகள் சளி, இருமல் தொல்லையால் பெரும் அவதிப்படுவர். தற்போது நாட்டு வைத்தியங்கள் மூலம் அதனை சரி செய்வதற்கான தீர்வுகளை காண்போம்.

1. சளி தொல்லை இருப்பவர்கள் கொய்யாப்பழத் துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வர சளி குறையும்.மழைக்காலங்களில் சளி, இருமல் பிரச்சனையா?..... தீர்வு இதோ!

2. மிளகு, சுக்கு, திப்பிலி ஆகிய மூன்றையும் இடித்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர சளி மற்றும் இருமல் குணமடையும்.

3. 150 மில்லி லிட்டர் பசும்பாலில் இரண்டு ஸ்பூன் அளவு மிளகுத்தூள், அரை ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதன்பின் வடிகட்டாமல் அதனை அப்படியே காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி சளி, இருமல் கட்டுக்குள் வரும்.

4. மிளகு அதிகமாக சேர்த்து ரசமாக குடித்து வர சளி, இருமல் குறையும்.

5. கற்பூரவள்ளி, துளசி, தூதுவளை ஆகிய மூன்று செடிகளிலும் இருந்து ஒவ்வொரு இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள சாறு தொண்டையில் இறங்கி கிருமிகளை அழித்து சளி, இருமல் குறைய வழிவகை செய்யும்.

6. நான்கு ஓமவல்லி இலை , இரண்டு வெற்றிலை , இரண்டு சிறிய துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை, தண்ணீரானது அரை டம்ளராக வற்றி வரும் வரை கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் சளி, இருமல் பிரச்சனையா?..... தீர்வு இதோ!இது நெஞ்சில் இருக்கும் சளிகளை வெளியேற்றும். (குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இதில் அனைத்திலும் பாதி அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கால் டம்ளர் தண்ணீர் கொடுத்தால் போதுமானது)

MUST READ