வழக்கமாக மே மாதத்தில் தான் கோடையின் உச்சகட்டம் நிலவும். ஆனால் தற்போதுள்ள கால நிலைகளில் மார்ச் மாதம் தொடங்கும் பொழுதே வெயிலின் ஆட்டம் தொடங்கி விடுகிறது. தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் வெயிலின் நிலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்நிலையில் மனிதனின் இன்றியமையாத உறுப்புகளில் ஒன்றான கண்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க சில டிப்ஸை பகிர்ந்துள்ளோம்.
கோடைகால வெப்பம் மற்றும் புற ஊதாக்கதிர்கள் கண்களை
நேரடியாக தாக்கும். முடிந்தவரை UV எனப்படும் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து விடுபட கண் கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம்.
கண்ணில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
8-9 மணி நேர அளவிற்கு தூங்குவதன் மூலம் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை வெகுவாக குறைக்கலாம். அதே சமயம் எலக்ட்ரானிக் சாதனங்களான மொபைல் மற்றும் லேப்டாப், டேப்லட் ஆகியவற்றை இரவில் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.நீர் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெயில் காலங்களில் வெள்ளரிக்காய்களை வட்டமாக நறுக்கி அரை மணி நேரம் கண்களில் வைத்திருந்தால் கண்களில் உள்ள உஷ்ணம் குறையும்.
மேலும் தினமும் இளநீர் குடித்து வருவது நல்லது.
வெயில் காலங்களில் கண்களில் ஏதேனும் தொந்தரவு தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.